கோலாலம்பூர், ஆகஸ்ட்.19-
12 வயதுடைய நான்கு சிறார்கள், தங்கள் சுயமரியாதையைப் பொருட்படுத்தாமல் தங்களின் சொந்த மேனியைக் காட்டும் புகைப்படங்களை வாட்ஸ்அப்பில் விற்ற ஒழுக்கக்கேடாக செயலைப் போலீசார் முறியடித்துள்ளனர் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
ஒழுக்கக்கேடானப் பொருட்களை விற்பது மூலம் கிடைக்கும் வருமானம், பெற்றோரின் வருமானத்தை விட அதிகமாக இருப்பதால் இவர்களைப் போன்ற சிறார்கள் பாதியிலேயே பள்ளிப் படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றனர் இன்று மக்களவையில் சைஃபுடின் குறிப்பிட்டார்.
12 வயதுடைய அந்த 4 சிறார்கள் வழிநடத்திய வாட்ஸ்அப் புலனத்தில் மொத்தம் 762 பேர் உள்ளனர்.
இந்த விவகாரத்தை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் பாலியல், பெண்கள் மற்றும் குழந்தைகள் புலனாய்வுப் பிரிவு கையாண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஒழுக்கக்கேடான நடவடிக்கையில் ஈடுபடும் இத்தகைய சிறார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், சிறார்கள் நீதிமன்றம் வரை கொண்டு வரப்படுகிறார்கள் என்று மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாகாம் குற்றஞ்சாட்டக்கூடும் என்று சைஃபுடின் விளக்கினார்.








