சிரம்பான், அக்டோபர்.09-
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 5 வயது சிறுமிக்கும், 29 வயது மாதுவிற்கும் மரணம் விளைவித்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு சிரம்பான் உயர் நீதிமன்றம் இன்று 32 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
44 வயது காலிட் ரெட்ஸா ஷுயிப் என்ற அந்த ஆடவர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி டத்தோ அஹ்மாட் முகமட் சால்லே மேற்கண்ட தீர்ப்பை வழங்கினார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி இரவு 7 மணியளவில் சிரம்பான், தாமான் நீ யான் என்ற இடத்தில் அந்நபர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிறுமி மற்றும் மாதுவின் உடல் அவயங்கள் ஒரு மாதத்திற்குப் பின்னர் அருகில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் மீட்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








