கோலாலம்பூர், அக்டோபர்.02-
கோலாலம்பூர் மாநகரில் இந்தியர்களின் பாரம்பரிய வர்த்தகப் பகுதியான பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் தீபாவளியை முன்னிட்டு கோலாலம்பூர் மாநகர் மன்றமான டிபிகேஎல் அமைத்த தீபாவளிக் கடைகள் இன்று காலையில் காற்றில் பறந்தன.

கனமழையுடன் வீசிய பலத்த காற்றைத் தொடர்ந்து பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் போடப்பட்டிருந்த தீபாவளிக் கடைகள் அனைத்தும் காற்றில் பறந்தது வியாபாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வரும் அக்டோபர் 20 ஆம் தேதி இந்துப் பெருமக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.

தீபாவளியை முன்னிட்டு பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தின் பிரதான சாலையில் பிரத்தியேகக் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டு அங்கு கூடாரங்கள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த கூடாரங்கள் இன்று காற்றில் பறந்தும், சரிந்து விழுந்தும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதனைத் தொடர்ந்து டிபிகேஎல் பணியாளர்கள் அக்கூடாரங்களை அகற்றும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர்.








