புத்ராஜெயா, ஜூலை.25-
குத்தகை அடிப்படையில் மருத்துவ அதிகாரிகளை நியமிப்பது உட்பட காலியாகியுள்ள 4 ஆயிரத்திற்கும் அதிகமான இடங்களுக்கு வரும் நவம்பர் மாதத்திற்குள் மருத்துவர்களை விரைந்து நியமிக்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனைத் தெரிவித்த அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல், மருத்துவர்களை நியமிக்கும் நடைமுறையில் கால தாமதம் ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதால் அவசரமாக இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார் என்று குறிப்பிட்டார்.
4 ஆயிரம் மருத்துவர்கள் இன்னும் நிரப்பப்படாத விவகாரத்தை இன்று அமைச்சரவையில் கேள்வி எழுப்பிய பிரதமர் அன்வார் , அந்த பதவிகள் விரைந்து நிரப்பும்படி அமைச்சரவையைக் குறிப்பாக சுகாதார அமைச்சரைக் கேட்டுக் கொண்டுள்ளார் என்று டத்தோ ஃபாமி தெரிவித்தார்.








