Mar 16, 2026
Thisaigal NewsYouTube
கூலிமில் இரண்டு வெவ்வேறு சோதனை
தற்போதைய செய்திகள்

கூலிமில் இரண்டு வெவ்வேறு சோதனை

Share:

கெடா, கூலிமில் இரண்டு வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பபட்ட சோதனைகளில் உதவித்தொகைக்குரிய 466 பேக்கெட் சமையல் எண்ணெய், 19 பெட்ரோலிய எரிவாயு கலன்களை உள்நாட்டு வாணிபம், மக்கள் வாழ்க்கைச் செலவின அமைப்பு கைப்பற்றியது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கூலிமில் உள்ள ஒரு மளிகைக் கடையிலும், ஓர் உணவகத்தின் கிடங்கிலும் இந்த சோதனை மேற்கெள்ளப்பட்டதாக மாநில இயக்குநர் எஃபென்டி ரஜ்னிகாந்த் தெரிவித்தார்.

பெர்மிட்யின்றி மேற்கண்ட பொருட்களை வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலில் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

1961 ஆம் ஆண்டு விநியோக கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக எஃபென்டி ரஜ்னிகாந்த் மேலும் கூறினார்

Related News