பயணிகள் ரயில் ஒன்று, 14 மாடுகளை மோதி தள்ளியதில் 300 க்கும் மேற்பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இச்சம்பவம் நேற்று அதிகாலை 3.10 மணியளவில் நெகிரி செம்பிலான், பாஹாவ் ரயில் நிலையத்திற்கும், பஹாங், ட்ரியாங் ரயில் நியைத்திற்கும் இடையில் 84.50 ஆவது கிலோமீட்டரில் பேரா அருகில் நிகழ்ந்தது.
பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது நிகழ்ந்த இச்சம்பவத்தில், பயங்கர மோதல் சத்தத்துடன் ரயில் பெட்டிகள் தண்டவாளப் பாதையிலிருந்து விலகுவதைப் போல குலுக்கின. இதில் யாரும் காய மடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
எட்டு பெட்டிகளை கொண்டு 300 க்கும் மேற்பட்ட பயணிகள் நெகிரி செம்பிலான், காமாஸ் ஸிலிருந்து கிளந்தான் தும்பாட்டை நோக்கி சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழூந்தது.
ரயில் இருப்புப்பாதையிலேயே உறங்கியிருக்கலாம் என்று நம்பப்படும் அந்த 14 மாடுகள் சம்பவ இடத்தலேயே மாண்டன. எட்டு ரயில் பெட்டிகளை கொண்ட அந்த ரயிலின் இயந்திரம் உட்பட சில பெட்டிகள் கடுமையாக சேதமுற்றன.







