கோல திரங்கானு, செப்டம்பர்.20-
ஓராங் அஸ்லி சமூகத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவனை மானபங்கம் புரிந்ததற்காக ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த வாரம், பகாங், சினியில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பில் சினி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் யஹாயா ஒத்மான் தெரிவித்தார்.
11 வயது மாணவனின் பெற்றோர் அளித்த புகாரைத் தொடர்ந்து அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு, தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








