Mar 24, 2026
Thisaigal NewsYouTube
கடலடி சுரங்கப் பாதை திட்டம் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய லிம் தீவிர முயற்சி
தற்போதைய செய்திகள்

கடலடி சுரங்கப் பாதை திட்டம் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய லிம் தீவிர முயற்சி

Share:

கோலாலம்பூர், ஜூலை12-

முன்னாள் பினாங்கு முதலமைச்சரான லிம் குவான் எங் மீது சுமத்தப்பட்டுள்ள கடலடித் சுரங்கப்பாதை திட்டத் தொடர்புடைய நான்கு ஊழல் குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய தீவிர முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.
அந்த ஊழல் வழக்கின் முதன்மை சாட்சியான டத்தோ சாருல் அகமது முகமட் சுல்கிஃப்லி நீதிமன்றத்தில் அளித்த சாட்சியம் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்குத் (MACC) கொடுத்த வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் மலேசிய வழகறிஞ்சர் மன்ற அலுவலகத்திற்கு லிம்மின் மனு அனுப்பட்டுள்ளது
Consortium Zenith Construction Sdn Bhd இயக்குனரான ஜாருல் , விசாரணையின் போது நீதிமன்றத்தில் அளித்த முரண்பாடான விளக்கங்களின் அடிப்படையில் தனது நம்பகத்தன்மையை சவால் செய்யும் நடவடிக்கைகளை அவரும் எதிர்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விசாரணைகள் ஜூலை 19 அன்று செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஸுரா அல்வி. முன் மீண்டும் தொடங்கும் என அரசாங்க வழக்கறிஞர் டத்தோ வான் ஷஹாருடின் வான் லடின் இதை உறுதிப்படுத்தினார்

Related News