May 21, 2026
Thisaigal NewsYouTube
நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படுமா?
தற்போதைய செய்திகள்

நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படுமா?

Share:

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு, எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுமானால் அதனை மக்களவை சபா நாயகர் தான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் ஏற்றுக் கொள்வாரா? என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் ஒருவர் கூறுகிறார்.

வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சியினர் இதற்கு முன்பு கொண்டு வரப்பட்ட பல்வேறு தீர்மானங்களை சபா நாயகர் ஜொஹாரி அப்துல் தொடக்கத்திலேயே நிராகரித்து விட்டதாக பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மாட் ஃபட்லி ஷாரி தெரிவித்தார்.

இந்நிலையில் பிரதமர் அன்வாருக்கு இருக்கக்கூடிய எம்.பி.க்களின் ஆதரவை முடிவு செய்வதற்கு அப்படியொரு தீர்மானம் கொண்டு வரப்படமானால் அதனை சபா நாயகர் ஏற்றுக்கொள்வாரா? என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று ஃபட்லி ஷாரி குறிப்பிட்டார்.

Related News