Jul 29, 2026
Thisaigal NewsYouTube
அன்வாரின் தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவினோம், ஆனால் அவர் எங்களை விசாரிக்கிறார்
தற்போதைய செய்திகள்

அன்வாரின் தேர்தல் பிரச்சாரத்திற்கு உதவினோம், ஆனால் அவர் எங்களை விசாரிக்கிறார்

Share:

பெத்தாலிங் ஜெயா,ஜன.22
கடந்த 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகு நடந்த போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் டத்தேஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் வெற்றிக்காக நானும் , முன்னாள் நிதி அமைச்சருமான துன் டாயிம் ஜைனுதீனும் பிரச்சாரம் செய்தோம். ஆனால், அவர் இப்போது எங்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளார் என்று முன்னாள் பிரதமர் துன் மு காதீர் முகமது தமது ஆதங்கத்தை இன்று தெரிவித்துள்ளார்.

அன்வாருக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்தேன். அதேபோல் துன் டாயிம் ஜைனுதீனும் பிரிச்சாரம் செய்தார். ஆனால், நாங்கள் குற்றம் இழைத்து இருப்பதாக கூறி எங்களை அவர் விசாரணை செய்து வருகிறார் என்று இன்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர்கள் கூட்டத்தில் துன் மகாதீர் இதனை தெரிவித்தார்.

துன் பட்டத்தை கொண்டுள்ளவர்களை அமலாக்கத் தரப்பினர் விசாரணைசெய்வது மிகக் கடினம் என்று கூறப்படுவதை துன் மகாதீர் மறுத்தார். இருந்த போதிலும் எந்த விசாரணைக்கும் தாம் தயாராக இருப்பதாக 98 வயதான துன் மகாதீர் குறிப்பிட்டார்.

Related News

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: விழிப்புடன் இருக்க மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுரை

ஜப்பானில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்: விழிப்புடன் இருக்க மலேசியர்களுக்கு தூதரகம் அறிவுரை

3 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த 18 மாதக் குழந்தையின் மரணம்: தந்தை மீது கொலை வழக்குப் பதிவு

3 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த 18 மாதக் குழந்தையின் மரணம்: தந்தை மீது கொலை வழக்குப் பதிவு

செத்தியா ஆலாம் சட்டவிரோத குடியேற்றம்: உடனடி நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் மந்திரி பெசார் உத்தரவு

செத்தியா ஆலாம் சட்டவிரோத குடியேற்றம்: உடனடி நடவடிக்கை எடுக்க சிலாங்கூர் மந்திரி பெசார் உத்தரவு

மலேசியாவிற்குள் இஸ்ரேலியர்கள் நுழைய தடை: எல்லையை வலுப்படுத்துகிறது உள்துறை அமைச்சு

மலேசியாவிற்குள் இஸ்ரேலியர்கள் நுழைய தடை: எல்லையை வலுப்படுத்துகிறது உள்துறை அமைச்சு

செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மித்ரா திட்டத்தின் கீழ் புதிய தளவாடங்கள்: அமைச்சர் ஆய்வு

செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு மித்ரா திட்டத்தின் கீழ் புதிய தளவாடங்கள்: அமைச்சர் ஆய்வு