தாம் பிரதமராக பொறுப்பு வகித்த 22 வருட காலகட்டத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி வழக்கத்திற்கு மாறாக சொத்துகளை வாங்கி குவித்துக் கொண்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிராக 15 கோடி வெள்ளி இழப்பீடு கோரி முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தொடுத்துள்ள மாநஷ்ட வழக்கில் இன்று தோல்விக் கண்டார்.
தாமும் தமது குடும்பத்தினரும் எவ்வாறு சொத்துக்களை வாங்கி குவித்துக் கொண்டனர் என்பதற்கான ஆதாரங்களையும், ஆவணங்களையும் பிரதமர் அன்வார், தமது தற்காப்பு மனுவில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஓர் உத்தரவை பிறப்பிக்குமாறு துன் மகாதீர் முகமது செய்து கொண்ட விண்ணப்பத்தை ஷா ஆலாம் உயர் நீதின்ற நீதித்துறை ஆணையர் சஹாரா ஹுசெயின் தள்ளுபடி செய்தார். துன் மகாதீரின் விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்பட்டதை அவரின் வழக்கறிஞர் முஹமாட் ரஃபிக் அலியும், அன்வாரின் வழக்கறிஞர் அலிஃப் சுஹைமியும் உறுதிபடுத்தினர்.








