Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பேருந்து கவிழ்ந்ததில் 6 பேர் காயம், 24 பேர் தப்பினர்
தற்போதைய செய்திகள்

பேருந்து கவிழ்ந்ததில் 6 பேர் காயம், 24 பேர் தப்பினர்

Share:

ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட்.11-

வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற தொழிற்சாலை பேருந்து ஒன்று, சாலை வளைவில் கவிழ்ந்ததில் 6 இந்தோனேசியர்கள் காயமுற்றனர். 24 பேர் காயமின்றி உயிர் தப்பினர்.

இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 7.20 மணியளவில் ஜார்ஜ்டவுன், ஜாலான் பாயா தெருபோங் மலைமேட்டுப் பகுதியில் நிகழ்ந்தது.

இதில் 22 க்கும் 26 க்கும் இடைப்பட்ட வயதுடைய 6 வெளிநாட்டவர்கள் காயமுற்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.

அந்த பேருந்து, கம்போங் ஜாவாவிலிருந்து பாயா தெருபோங் தொழிற்பேட்டைப் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.

பேருந்தின் பிரேக் செயலிழந்து விட்டதாக நம்பப்படுகிறது. அந்த பேருந்தில் ஓட்டுநர் உட்பட மொத்தம் 30 பேர் இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று பினாங்கு தீயணைப்பு, மீட்புப்படையின் உதவி இயக்குநர் ஜோன் பிரான்சிஸ் தெரிவித்தார்.

Related News