Feb 8, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா ஒரு மாயாஜால பூமி - அமெரிக்கர்களுக்கு தூதர் எட்கார்ட் விடுத்த அன்பான அழைப்பு
தற்போதைய செய்திகள்

மலேசியா ஒரு மாயாஜால பூமி - அமெரிக்கர்களுக்கு தூதர் எட்கார்ட் விடுத்த அன்பான அழைப்பு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.08-

மலேசியாவிற்கான அமெரிக்கத் தூதர் எட்கார்ட் டி காகன், தனது பதவிக்காலம் வரும் பிப்ரவரி 15-டன் முடிவடைய உள்ள நிலையில், 'விசிட் மலேசியா 2026' பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கர்களை மலேசியாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

மலேசியர்களின் அன்பான விருந்தோம்பல் மற்றும் நட்புணர்வைக் குறிப்பிட்ட அவர், இங்குள்ள பல்வேறு கலாச்சாரங்கள், மதங்கள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த உணவுகள் பயணிகளுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தைத் தரும் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

மலேசியாவின் இயற்கை அழகைப் பற்றிப் பேசிய அவர், அழகான கடற்கரைகள், மலை ஏறும் வசதிகள் மற்றும் அபூர்வமான வனவிலங்குகள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளுக்கு மிகச் சிறந்த வாய்ப்புகள் என்று கூறினார். குறிப்பாகப் பினாங்கு மற்றும் கோலாலம்பூரை அவர் பரிந்துரைத்ததோடு, கிளந்தான், ஈப்போ, கெடா, ஜோகூர், சபா மற்றும் சரவாக் போன்ற இடங்களையும் தனது பயண நினைவுகளாகப் பகிர்ந்து கொண்டார். 2024-ஆம் ஆண்டில் அமெரிக்கச் சுற்றுலாப் பயணிகளின் வருகை 18.4 விழுக்காடு அதிகரித்துள்ள நிலையில், மலேசியா ஒரு கட்டாயம் பார்க்க வேண்டிய நாடு என்று அவர் வலியுறுத்தினார்.

Related News