கோலாலம்பூர், நவம்பர்.13-
நாடெங்கிலும் உள்ள பள்ளிகளில், இவ்வாண்டு, 20,000-த்திற்கும் மேற்பட்ட புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகவும், பணியிடங்களில் திறனை மேம்படுத்துவதற்காகவும் இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி வரையில், மொத்தம் 10,045 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், அடுத்தக் கட்டமாக மேலும் 10,096 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை மொத்தம் 20,141 ஆக உயரும் என்றும் ஃபாட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.








