Oct 1, 2026
Thisaigal NewsYouTube

மனைவி சித்தி ஹஸ்மா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கண்ணீர் விட்ட மகாதீர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மனைவி சித்தி ஹஸ்மா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கண்ணீர் விட்ட மகாதீர்

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, மறைந்த மனைவி துன் டாக்டர் சித்தி ஹஸ்மா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இன்று சென்று அஞ்சலி செலுத்தினார்.

புத்ராஜெயா, புசாரா நெகாராவில் உள்ள அவரது புதைகுழிக்கு காலை 11.05 மணியளவில் குடும்பத்தினருடன் சென்ற மகாதீர், சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் அங்கு இருந்தார்.

ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக தன்னுடன் வாழ்ந்த மனைவியை நினைவுகூர்ந்தபோது, மகாதீர் கண்ணீர் விட்டு உணர்ச்சிவசப்பட்டதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.

மகாதீரின் மூத்த மகள் மரினா மகாதீரும் தமது தாயார் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் தேசிய பூப்பந்து வீரர் டத்தோ ஸ்ரீ டாக்டர் லீ சோங் வெய், பாடகர் டத்தோ ரம்லி சரிப் உள்ளிட்டோரும் சித்தி ஹஸ்மாவுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.

வெற்றி, தோல்வி என பாராமல் வீரர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்த சித்தி ஹஸ்மாவின் அன்பையும் ஆதரவையும் ஒருபோதும் மறக்க முடியாது என லீ சோங் வெய் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ காணொளி விவகாரம்: எந்த முடிவாக இருந்தாலும் ஏற்கத் தயார் – முஹமட் ஷுஹைலி

கேஎல்ஐஏ காணொளி விவகாரம்: எந்த முடிவாக இருந்தாலும் ஏற்கத் தயார் – முஹமட் ஷுஹைலி

மாணவர்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக புகார்: பள்ளி நிகழ்ச்சிகளுக்கு கல்வி அமைச்சு அதிரடி தடை

மாணவர்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக புகார்: பள்ளி நிகழ்ச்சிகளுக்கு கல்வி அமைச்சு அதிரடி தடை

78 ஆண்டுகளாக மக்களின் அடையாளத்தைப் பாதுகாக்கும் தேசியப் பதிவுத் துறை

78 ஆண்டுகளாக மக்களின் அடையாளத்தைப் பாதுகாக்கும் தேசியப் பதிவுத் துறை

அரச குடும்பத்தை அரசியலுக்குள் இழுத்ததாகக் குற்றச்சாட்டு: ஜசெக போலீசில் புகார்

அரச குடும்பத்தை அரசியலுக்குள் இழுத்ததாகக் குற்றச்சாட்டு: ஜசெக போலீசில் புகார்

37 மில்லியன் ரிங்கிட் நிதி முறைகேடு: யுஐடிஎம் ஹோல்டிங்ஸ் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி மீது ஊழல் குற்றச்சாட்டு

37 மில்லியன் ரிங்கிட் நிதி முறைகேடு: யுஐடிஎம் ஹோல்டிங்ஸ் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி மீது ஊழல் குற்றச்சாட்டு

தெருநாய்கள், பூனைகள் கட்டுப்பாட்டில் பேராக் மாநிலம் முன்னுதாரணமாகிறது

தெருநாய்கள், பூனைகள் கட்டுப்பாட்டில் பேராக் மாநிலம் முன்னுதாரணமாகிறது