Oct 2, 2026
Thisaigal NewsYouTube

அடுத்த சில நாட்களுக்கு மோசமான வானிலை: தயார் நிலையில் இருக்க பேரிடர் நிர்வாகக்குழுவிற்கு உத்தரவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அடுத்த சில நாட்களுக்கு மோசமான வானிலை: தயார் நிலையில் இருக்க  பேரிடர் நிர்வாகக்குழுவிற்கு உத்தரவு

கோலாலம்பூர், நவம்பர்.22-

ஆறு மாநிலங்களில் அடுத்த சில நாட்களுக்கு மோசமான வானிலை நிலவும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து கனத்த மழையினால் ஏற்படக்கூடிய வெள்ள நிவாரண நடவடிக்கைகளைக் கவனிக்கத் தயார் நிலையில் இருக்குமாறு மாநில மற்றும் மாவட்ட பேரிடர் நிர்வாகக் குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசாங்க ஏஜென்சியுடன் தொர்புடைய தரப்புகளுடன் இணைந்து நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருமாறு தேசிய பேரிடர் நிர்வாக ஏஜென்சியான நட்மா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்படும் மக்களை உடனடியாக மீட்கவும், அவர்களை நிவாரண மையங்களில் கொண்டுச் சேர்க்கவும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக் கொள்லூமாறு மாநில மற்றும் மாவட்ட அளவிலாான நிர்வாகக் குழுவினருக்கு அது நினைவுறுத்தியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →