Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பள்ளியில் மாணவி கொலை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுப்பு!
தற்போதைய செய்திகள்

பள்ளியில் மாணவி கொலை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க சபாநாயகர் அனுமதி மறுப்பு!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.22-

பண்டார் உத்தாமாவில் பள்ளி மாணவி சக மாணவரால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரும் கம்பார் நாடாளுமன்ற உறுப்பினர் சோங் ஸெமினின் தீர்மானத்தை நாடாளுமன்ற அவைத் தலைவர் டான் ஶ்ரீ ஜொஹாரி அப்துல் இன்று நிராகரித்தார். இந்த விவகாரம் குறித்து கல்வி அமைச்சர் ஏற்கனவே கடந்த அக்டோபர் 16ஆம் தேதி விளக்கம் அளித்திருப்பதால், நாடாளுமன்ற விதி 18(7)(b) இன் கீழ் இந்தத் தீர்மானத்தை அவர் நிராகரிப்பதாக ஜொஹாரி குறிப்பிட்டார்.

பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அதிகரித்து வரும் கவலைகளும் பள்ளி ஒழுங்குமுறைகளைக் கையாள்வதில் உள்ள அமைப்பு நிலையிலான தோல்விகளையும் காரணம் காட்டி சோங் ஸெமின் அக்டோபர் 15ஆம் தேதி இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்திருந்தார். மாணவர்களின் புகார்களைக் கையாள்வதில் உள்ள பலவீனம், பலவீனமான கண்காணிப்பு, பொருத்தமற்ற பதில்கள் காரணமாக, பாதிக்கப்பட்டவர்கள் உதவி பெறுவது தடுக்கப்பட்டு, குற்றவாளிகள் தப்ப விடுவதை இது காட்டுவதாக சோங் ஸெமின் வலியுறுத்தினார்.

Related News