May 7, 2026
Thisaigal NewsYouTube
சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம் மலேசியர்களிடையே உள்ள ஒற்றுமையைப் பிரதிபலிக்கிறது: அன்வார் பெருமிதம்
தற்போதைய செய்திகள்

சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம் மலேசியர்களிடையே உள்ள ஒற்றுமையைப் பிரதிபலிக்கிறது: அன்வார் பெருமிதம்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.17-

மலேசியாவில் பல்வேறு இனத்தவர்களாலும் சீனப் புத்தாண்டு கொண்டாடப்படுவது, மலேசியர்களிடையே உள்ள ஒற்றுமை உணர்வை பிரதிபலிப்பதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மசீச கட்சி ஏற்பாடு செய்திருந்த சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் இன்று கலந்து கொண்ட அவர், இக்கொண்டாட்டமானது ஒரு சமூகத்தினருக்கானது மட்டுமல்ல, அனைத்து மலேசியர்களுக்குமானது என்று குறிப்பிட்டார்.

மேலும், நெருப்புக் குதிரை ஆண்டானது, துடிப்பான மற்றும் வீரியமான வளர்ச்சியைத் தூண்டும் என தான் நம்புவதாகவும் அன்வார் தெரிவித்தார்.

அதே வேளையில், குதிரை வேகம், மகத்தான வலிமை மற்றும் ஆற்றலைக் குறிக்கிறது என்பதால், இவ்வாண்டு மலேசியாவின் பொருளாதார செயல்திறன் மற்றும் வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.

இக்கொண்டாட்டத்தில் அன்வாருடன் துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடியும் கலந்து கொண்டார்.

மேலும், முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப், முன்னாள் மசீச தலைவர் டான் கூன் சுவான் மற்றும் மலேசியாவுக்கான சீனத் தூதர் Ouyang Yujing உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தைக் குறிக்கும் பாரம்பரிய yee sang tossing சடங்கில், கௌரவ விருந்தினர்களுடன் இணைந்த அன்வார், அவர்களுடன் தனது மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டார்.

Related News

ஜாலான் மஸ்ஜித் இந்தியா நிலக்குழி விபத்து: விஜயலட்சுமியின் குடும்பத்தினர் 8 லட்சத்து 24 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு கோருகின்றனர்

ஜாலான் மஸ்ஜித் இந்தியா நிலக்குழி விபத்து: விஜயலட்சுமியின் குடும்பத்தினர் 8 லட்சத்து 24 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடு கோருகின்றனர்

நெகிரி செம்பிலானில் எந்த நேரத்திலும் தீடீர் தேர்தல் அறிவிக்கப்படலாம் / தயாராக இருக்குமாறு ஆதரவாளர்களுக்கு மந்திரி பெசார் அமினுடின் வேண்டுகோள்

நெகிரி செம்பிலானில் எந்த நேரத்திலும் தீடீர் தேர்தல் அறிவிக்கப்படலாம் / தயாராக இருக்குமாறு ஆதரவாளர்களுக்கு மந்திரி பெசார் அமினுடின் வேண்டுகோள்

ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுகின்றதா? - மந்திரி பெசார் ஓன் ஹபீஸ் காசி மறுப்பு

ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்படுகின்றதா? - மந்திரி பெசார் ஓன் ஹபீஸ் காசி மறுப்பு

சாஹிட் தொடர்பான டிஎன்ஏஏ விவகாரம்: வழக்கறிஞர் மன்றத்திற்கு சாதகமாக அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பு

சாஹிட் தொடர்பான டிஎன்ஏஏ விவகாரம்: வழக்கறிஞர் மன்றத்திற்கு சாதகமாக அப்பீல் நீதிமன்றம் தீர்ப்பு

மலாக்கா சுற்றுலாப் பயணிகளிடம் கைவரிசை: 5 பிக்பாக்கெட் திருடர்கள் கைது

மலாக்கா சுற்றுலாப் பயணிகளிடம் கைவரிசை: 5 பிக்பாக்கெட் திருடர்கள் கைது

மாமன்னரின் ரஷ்ய பயணம்: 'விக்டரி டே' கொண்டாட்டங்களில் பங்கேற்க மாஸ்கோ சென்றடைந்தார்

மாமன்னரின் ரஷ்ய பயணம்: 'விக்டரி டே' கொண்டாட்டங்களில் பங்கேற்க மாஸ்கோ சென்றடைந்தார்