ஈப்போ, தாமன் பிஞ்சியில் ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, தன்னந்தனியாக வசித்து வந்த முதியவர் ஒருவரின் சடலம், தீயணைப்பு, மீட்புப் படையினரால் மீட்கப்பட்டது.
நேற்று மாலை, அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால், அந்த வீட்டில் வசித்து வந்த 70 வயது முதியவருக்கு ஏதோனும் நடந்திருக்கக் கூடும் என்ற அச்சத்தில், அண்டை வீட்டாரிடமிருந்து பெறப்பட்ட புகாரைத் தொடர்ந்து, பூட்டப்பட்டிருந்த வீட்டை சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி கதவை உடைத்து சென்றதில், உயிரிழந்த நிலையில் அந்த முதியவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக பேராக் மாநில தீயணைப்பு, மீட்புப் துறையின் இயக்குநர் சயானி சைடொன் தெரிவித்தார்.
இந்த முதியவர் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைக்காக அந்த உடல் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் சயானி சைடொன் குறிப்பிட்டார்.








