Jul 29, 2026
Thisaigal NewsYouTube
விபச்சாரம் புரிந்ததாக ஆறு மாதக் கர்ப்பிணி பெண் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

விபச்சாரம் புரிந்ததாக ஆறு மாதக் கர்ப்பிணி பெண் மீது குற்றச்சாட்டு

Share:

பாங்கி, ஜூன் 19-

இம்மாத தொடக்கத்தில், மிசா ஓசாவா என்ற பெயரை கொண்டு டெலிகிராம் கணக்கில் வாடிக்கையாளர்களை தேடி விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஆறு மாதக் கர்ப்பிணி பெண் ஒருவர் பண்டார் பாரு பாங்கி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

27 வயது சித்தி அமிசா பஹாருதீன் என்ற அந்த கர்ப்பிணி பெண் மாஜிஸ்திரேட் நூர்தியானா முகமது நவாவி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார்.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் ஓராண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 372B பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இவ்வாண்டு ஜூன் 6 ஆம் தேதி மாலை 4 மணியளவில் காஜாங், பண்டார் புக்கிட் மக்கோத்தா -வில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் இக்குற்றத்தை புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், அந்த பெண் HIV -யினால் பாதிப்படைந்திருப்பதாகவும் கர்ப்பிணியாக இருப்பதாகவும் தமக்கு தண்டனையை குறைத்து தரும்படி மேல்முறையீடு செய்துள்ளார்.

Related News

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது

துப்பாக்கி முனையில் கடையில் கொள்ளை; சந்தேகநபரை போலீஸ் தீவிரமாக தேடுகிறது