Dec 3, 2025
Thisaigal NewsYouTube
14 வயது சிறுவனிடம் பாலியல் சீண்டல்: பெர்லிஸில் ஊக்கப் பயிற்சியாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு!
தற்போதைய செய்திகள்

14 வயது சிறுவனிடம் பாலியல் சீண்டல்: பெர்லிஸில் ஊக்கப் பயிற்சியாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

Share:

கங்கார், செப்டம்பர்.17-

14 வயது சிறுவனிடம் பாலியல் சீண்டல் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக, தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை எதிர்த்து, ஊக்கப் பயிற்சியாளர் ஒருவர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணை கோரியுள்ளார்.

பாடாங் பெசாரில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில், கடந்த ஜூலை 10-ஆம் தேதி, காலை 9 மணியளவில், 44 வயதான முகமட் ஸுல்கர்நாயின் அதான் இக்குற்றத்தைப் புரிந்தார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14(a) இன் கீழ் முதல் குற்றச்சாட்டும், சட்டப்பிரிவு 11(1) -இன் கீழ் மற்றொரு குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இக்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், அதிகபட்சமாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனையும், பிரம்படிகளும் வழங்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News