கோலாலம்பூர், ஆகஸ்ட்.19-
மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவின் வரி விதிப்பால் மெதுவடையக்கூடும் என்று முதலீடு, வர்த்தக, தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ ஸாஃப்ருல் அப்துல் அஸிஸ் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு மலேசியாவின் வளர்ச்சி 0.6 முதல் 1.2 விழுக்காட்டுப் புள்ளிகள் வரை இருக்கலாம் என்று முன்னுரைக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியும் மெதுவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா விதிக்கும் வரியின் தாக்கம் ஆண்டு முழுவதும் உணரப்படலாம் என்று அவர் மேலும் கூறினார்.








