வீடமைப்புப்பகுதி ஒன்றில் தங்கள் வீட்டிற்கு செல்ல லிப்டில் ஏறுவதற்கு முற்பட்ட கணவ,ன் மனைவ ஆகியோர் அடையாளம் தெரியாத நபரால் எரிதிரவக வீச்சுக்கு ஆளாகினர். இச்சம்பவம் நேற்று செலாயாங்கில் உள்ள பங்சாபுரீ லக்சமன் ஜெயா அடுக்குமாடி வீட்டுப்பகுதியில் நிகழ்ந்தது. எரிதிரவ வீச்சினால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் கணவன் மனைவி, தற்போது செலாயாங் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண் ரொட்டி வியாபாரியான கணவன், மனைவிக்கு எதிராக இந்த எரிதிரவ வீச்சை நடத்திய நபர் குறித்து அந்த வீடமைப்புப்பகுதியின் லிப்ட் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அநத் தம்பதியரின் கடை தீயிடப்பட்டு நாசப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


