Dec 4, 2025
Thisaigal NewsYouTube
மியூசியம் பணியாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மியூசியம் பணியாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு

Share:

ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட்.06-

பினாங்கு, பத்து ஃபெரிங்கியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் மியூசியம் பணியாளர் ஒருவர், 6 வயது தென் கொரியா சிறுமியைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக ஜார்ஜ்டவுன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

18 வயது சோங் கை தீ என்ற அந்த மியூசியம் பணியாளர், நீதிபதி இர்வான் சுவாய்ன்போன் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஜுலை 31 ஆம் தேதி மாலை 4 மணியளவில் ஜார்ஜ்டவுன், ஹில்டனின் டபள் திரி ரிசோர்ட் தங்கும் விடுதியில் தெடி பெசார் மியூசியத்தில் அந்த நபர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News