May 24, 2026
Thisaigal NewsYouTube
விமானங்கள் மிக தாழ்வாக பறக்கும், அச்சம் தேவையில்லை
தற்போதைய செய்திகள்

விமானங்கள் மிக தாழ்வாக பறக்கும், அச்சம் தேவையில்லை

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 26-

வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் 2024 ஆம் ஆண்டுக்கான தேசியத்தினக் கொண்டாட்டத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அரச மலேசிய ஆகாயப்படையின் வான் சாகசங்கள் நிகழ்த்தப்படவிருக்கின்றன.

இதனையொட்டி வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையில் அரச மலேசிய ஆகாயப்படையின் விமான சாகச ஒத்திகை நடைபெறும்.

இந்நிலையில் ஒத்திகையின் போது இராணுவ விமானங்கள் மிக தாழ்வாக பறக்கும் நிலை இருப்பதால் பொது மக்கள் பீதியடைய வேண்டியதில்லை என்று அரச மலேசிய ஆகாயப்படை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News