Jul 31, 2026
Thisaigal NewsYouTube
கெத்தும் விநியோகிப்பை முறியடித்த காவல் துறை
தற்போதைய செய்திகள்

கெத்தும் விநியோகிப்பை முறியடித்த காவல் துறை

Share:

கோலாலம்பூர், டமான்சாரா உத்தாமா,ஜாலான் எஸ்எஸ் 21/1இல் காரில் கெத்தும் விநியோகிப்பு நடவடிக்கையைக் காவல் துறை முறியடித்துள்ளது. அதன் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அளித்த பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல் துறைத் தலைவர் சுப்ரிதென்டன் எம் ஹுசெயின் சொலெஹுடின் சொல்கிஃப்லி தெரிவிக்கயில், இரவு 9.10 மணி அளவில் 31 முதல் 38 வயதுக்கு உட்பட்ட அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் 15 கருப்பு பிளாஸ்டிக் பையில் 300 கிலோ எடையுள்ள கெத்தும் இலைகள் அவர்களின் ஹொன்டா சிஆர்வி காரில் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் ஹுசெயின் சொலெஹுடின் கூறினார்.

அவை 2 ஆயிரம் வெள்ளி மதிப்புடையவையாகவும் ஏற்த்தாழ 300 பேருக்கு அது விநியோகிக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related News