ஜார்ஜ்டவுன், நவம்பர்.26-
பினாங்கில், எஸ்பிஎம் தேர்வு எழுதும் இரு மாணவர்கள் வெள்ள நிவாரண மையத்தில் தங்கி இருப்பதாக மாநில கல்வி இலாகா தெரிவித்துள்ளது.
SK Lahar Yooi வெள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அவர்கள், SMK Pokok Sena பள்ளியில் தேர்வு எழுதுகிறார்கள் என மாநில கல்வி இலாகா இயக்குநர் Mohamad Dziauddin Mat Saad தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், மொத்தம் 8 எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தங்களுக்குத் தகவல் கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் பள்ளியின் தங்கும் விடுதிகள், உறவினர் வீடுகள் மற்றும் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் பாதுகாப்பான முறையில் தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் Mat Saad தெரிவித்துள்ளார்.








