Mar 17, 2026
Thisaigal NewsYouTube
18 மாதக் குழந்தை நீரில் மூழ்கியது
தற்போதைய செய்திகள்

18 மாதக் குழந்தை நீரில் மூழ்கியது

Share:

கனோவிட், பிப்ரவரி 26 -

நங்கா கெர்மை, கனோவிட் ஆற்றில் 18 மாதக் குழந்தை ஒன்று தவறுதலாக விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தது.

இச்சம்பவம் குறித்து நேற்று மாலை 6:16 மணியளவில் கிடைக்கபெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து கனோவிட் தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் அவ்விடத்திற்கு விரைந்ததாக சரவாக் தீயணைப்பு நடவடிக்கை செயல்பாட்டு மையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

விசாரிக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பாட்ரிக் கீலிங் பூனௌ என்கிற ஆண் குழந்தை ஆற்றின் அருகில் இருந்தபோது தவறி விழுந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தின் போது அந்த குழந்தையின் பெற்றோர் இருவரும் நெல் வயலில் வேலை செய்து கொண்டிருந்ததாகவும் குழந்தை அவ்விடத்தில் இருப்பது தெரியாது என்றும் கூறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

நேற்று இரவு 8 மணியளவில் பாதுகாப்பு காரணமாக தேடுதல் மற்றும் மீட்பு பணி நிறுத்தப்பட்டதுடன், இன்று அதிகாலையில் அப்பணி மீண்டும் தொடரப்பட்டதாக அவர் அறிவித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு