May 28, 2026
Thisaigal NewsYouTube
சாட்சிகள் உட்பட 12 நபர்களிடம் போலீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

சாட்சிகள் உட்பட 12 நபர்களிடம் போலீசார் விசாரணை

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.26-

கடந்த ஞாயிற்றுக்கிழமை பெட்டாலிங் ஜெயா, கோத்தா டாமான்சாராவில் உள்ள ஒரு நகைக்கடையில் துப்பாக்கி முனையில் 20 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை சாட்சிகள் உட்பட 12 தனி நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான் தெரிவித்தார்.

சம்பவம் நிகழ்ந்த அன்று மாலை 4.56 மணியளவில் பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து போலீசார் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட கொள்ளையன் கண்ணாடி பேழைகளில் வைக்கப்பட்டு இருந்த 20 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள 6 அடுக்கு நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்றுள்ளான் என்பது புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எனினும் சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழி, உலு சிலாங்கூர், புக்கிட் பெருந்தோங் வட்டாரத்தில் கைது செய்யப்பட்டான். கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று டத்தோ ஹுசேன் குறிப்பிட்டார்.

துப்பாக்கி முனையில் இந்த துணிகரக் கொள்ளையை நடத்தியவன் ஓர் உதவிப் போலீஸ்காரர் என்பது தெரிய வந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

பிரசரானா நிறுவனத்திற்கு அதிகபட்ச அபராதம்: அமைச்சர் அந்தோணி லோக் அதிரடி உத்தரவு

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்