கோலாலம்பூர், செப்டம்பர்.18-
சபா மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் வணிக உரிமையாளர்களின் வங்கிக் கடன்களுக்கான மாதத் தவணையை 6 மாதங்களுக்கு ஒத்திவைப்பதாக பேங்க் ரக்யாட் அறிவித்துள்ளது.
நெருக்கடியான இக்காலகட்டத்தில் அவர்களின் நிதிச் சுமைகளைக் குறைப்பதே இம்முயற்சியின் நோக்கமாகும் என்று பேங்க் ரக்யாட் தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மாட் ஷாரில் முகமட் ஷாரிஃப் தெரிவித்துள்ளார்.
இவ்வசதி, தனிநபர், வீட்டுவசதி, வாகனம், கல்வி, நகை அடகு, கடன் அட்டை உள்ளிட்ட அத்தனை கடன்களையும் உள்ளடக்கியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேங்க் ரக்யாட் அளித்துள்ள இச்சலுகை அவர்களுக்கு இந்த இக்கட்டான நேரத்தில் ஓரளவு நிவாரணம் அளிக்கும் என்று தாங்கள் நம்புவதாகவும் அஹ்மாட் ஷாரில் தெரிவித்துள்ளார்.








