மலாக்கா, டிசம்பர்.19-
மலாக்காவில் 15 மியன்மார் பிரஜைகளைக் கடத்தி வந்த கும்பலை மலாக்கா போலீசார் முறியடித்துள்ளனர். மியன்மாரிலிருந்து சட்டவிரோதமாகக் குடிபெயர்ந்தவர்களைக் கடத்தி வந்த பெரிய கும்பலை போலீசார் அடையாளம் கண்டு வளைத்துப் பிடித்தனர்.
இந்தச் சோதனையின் போது 15 மியன்மார் பிரஜைகள் மீட்கப்பட்டுள்ளனர். இக்கடத்தலில் தொடர்புடையதாகக் கருதப்படும் நபர்களைப் பிடிப்பதற்கான விசாரணையை மலாக்கா போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர் என்று மலாக்கா தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.
மலாக்காவில் இன்று நடந்த இந்தச் சம்பவம், மனிதக் கடத்தல் கும்பலுக்கு எதிராக மலேசியப் போலீசார் மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாகும என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.








