இஸ்கண்டார் புத்ரி, நவம்பர்.25-
ஜோகூரில் வாடகைக் கார் ஓட்டுநர் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் பொய்யான புகார் அளித்த 25 வயது பெண்ணைப் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கங்கார் பூலாயிலுள்ள ஜாலான் பூலாய் பெர்டானாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, இச்சம்பவம் நடந்ததாக அப்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
ஆனால் முதற்கட்ட விசாரணையில், இரவில் தாமதமாக வீட்டிற்கு வந்த அப்பெண்ணைக் குடும்பத்தினர் திட்டியதையடுத்து, அவர் இது போன்ற பொய்யானப் புகாரைப் பதிவு செய்துள்ளதாக இஸ்கண்டார் புத்ரி போலீஸ் தலைவர் எம். குமரேசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தண்டனைச் சட்டம், பிரிவு 182-ன் கீழ், பொய்யான புகார் அளித்ததற்காக அப்பெண் விசாரணை செய்யப்பட்டு வருவதாக எம். குமரேசன் குறிப்பிட்டுள்ளார்.
இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் 6 மாதச் சிறைத் தண்டனையோ அல்லது 2000 ரிங்கிட் அபராதமோ அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.








