Jun 27, 2026
Thisaigal NewsYouTube
மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்
தற்போதைய செய்திகள்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

Share:

கோலாலம்பூர், மே.05-

கடந்த மாதம், வங்சா மாஜூவில் இரு மைகாட் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி, மானிய விலை பெட்ரோலை வாங்கிய குற்றத்தை ஒப்புக் கொண்ட, வங்காள தேசத்தைச் சேர்ந்த பெட்ரோல் நிலைய ஊழியருக்கு, கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 10,000 ரிங்கிட் அபராதம் விதித்தது.|

51 வயதான Jakir Hossain என்ற அந்த நபர், தன் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் நீதிபதி Aina Azahra Arifin முன்னிலையில் ஒப்புக் கொண்டார்.

உரிய அனுமதி அல்லது நியாயமான காரணமின்றி, Lim Mei Cheow என்ற நபருக்குச் சொந்தமான மைகாட்டைப் பயன்படுத்தி Shell பெட்ரோல் நிலையத்தில் மானிய பெட்ரோல் வாங்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அதேபோல், மற்றொரு குற்றச்சாட்டில், Yap Thin Wuei என்பவரின் மைகாட்டைப் பயன்படுத்தி Jakir பெட்ரோல் வாங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

ஜோகூர் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தும்;- சைபுடின் நசுத்தியோன்

ஜோகூர் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தும்;- சைபுடின் நசுத்தியோன்

போலீஸ் காரின் மீது செங்கல் வீசிய வீடற்ற வெளிநாட்டு நபர் கைது

போலீஸ் காரின் மீது செங்கல் வீசிய வீடற்ற வெளிநாட்டு நபர் கைது

வதந்திகளைத் தவிர்த்து உண்மை, தரவுகளுடன் பிரச்சாரம் செய்க: அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கறார் அறிவுறுத்தல்

வதந்திகளைத் தவிர்த்து உண்மை, தரவுகளுடன் பிரச்சாரம் செய்க: அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கறார் அறிவுறுத்தல்

கோத்தா பாருவில் 2.01 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சிகரெட் கடத்தல் முறியடிப்பு

கோத்தா பாருவில் 2.01 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சிகரெட் கடத்தல் முறியடிப்பு

ஜோஹர் மாநிலத் தேர்தல்: 56 தொகுதிகளில் 172 வேட்பாளர்கள் போட்டி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஜோஹர் மாநிலத் தேர்தல்: 56 தொகுதிகளில் 172 வேட்பாளர்கள் போட்டி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தலைவர்கள் புடைசூழ, பெற்றோர் ஆசியுடன் ஸ்கூடாய் தொகுதியில் களம் இறங்கினார் கார்த்தியாயினி ஜெயபாலன்

தலைவர்கள் புடைசூழ, பெற்றோர் ஆசியுடன் ஸ்கூடாய் தொகுதியில் களம் இறங்கினார் கார்த்தியாயினி ஜெயபாலன்