Oct 9, 2026
Thisaigal NewsYouTube

பட்டப் படிப்பை முடிக்க நோய் ஒரு தடையல்ல என நிரூபித்தார் ஏம்ஸ்ட் பல்கலைக்கழக மாணவர் தேவா சுரேந்திரா சில்வடம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பட்டப் படிப்பை முடிக்க நோய் ஒரு தடையல்ல என நிரூபித்தார் ஏம்ஸ்ட் பல்கலைக்கழக மாணவர் தேவா சுரேந்திரா சில்வடம்

சுங்கை பட்டாணி, ஜூன்.21-

ஏழு ஆண்டுகளாக muscular dystrophy எனப்படும் தசை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக மாணவர் தேவா சுரேந்திரா சில்வடம், தனது படிப்பைத் தொடர்ந்து இளங்கலைப் பட்டத்தைப் பெற்றுள்ளார். 26 வயதான தேவா, அவரது பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழாவில் நண்பர்களின் உதவியுடன் மேடைக்குச் சென்று தமது பட்டத்தைப் பெற்றார். ஐந்து வருடக் கல்லூரி வாழ்க்கையில் தசைகள் பலவீனமடைதல், முதுகெலும்பு வளைவு போன்ற பல சவால்களை எதிர்கொண்ட போதிலும், அவர் வணிகத் துறையிலும் தகவல் அமைப்பு மேலாண்மை துறையிலும் இளங்கலைப் பட்டத்தை முடிப்பதில் வெற்றி பெற்றார்.

பெற்றோரின் ஆதரவு, பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட வசதிகள்,, நண்பர்களின் உதவி ஆகியவை அவரது கல்விப் பயணத்தில் பெரும் பங்காற்றின. தற்போது பினாங்கில் வணிக அமைப்பு ஆய்வாளராகப் பணிபுரியும் தேவா, தனது உடல்நிலையைப் புரிந்து கொண்டு நெகிழ்வான, இலகுவான பணிச்சூழலை வழங்கிய தனது முதலாளிக்கு நன்றியைத் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →