Sep 26, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: இன்று அன்வாருடன் ஜாஹிட் சந்திப்பு
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: இன்று அன்வாருடன் ஜாஹிட் சந்திப்பு

Share:

நெகிரி செம்பிலான் மாநில அரசியல் நெருக்கடி குறித்து விவாதிக்க, அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி இன்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்திக்கிறார்.

இருப்பினும், இந்த சந்திப்பு நடைபெறும் நேரம் மற்றும் இடம் குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை.

முன்னதாக, இச்சந்திப்பை உறுதிப்படுத்திய பிரதமர் அன்வார், நேற்று நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துங்கு முஹ்ரிஸைச் சந்தித்ததாகவும், மாநில அரசு தொடர்ந்து செயல்பட வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கிடையில், தாம் வழக்கம் போல் தனது பணிகளைத் தொடரப்போவதாக மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருண் தெரிவித்துள்ளார்.

Related News