செந்தூலில் உள்ள கடை வீடொன்றில் கடந்த சனிக்கிழமை மூன்று இலங்கையர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் தொடர்ந்து மூன்றாவது நாளாக தேடப்பட்டு வருகின்றனர் என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ
அலாவுடின் அப்துல் மஜிட் கூறினார்.
அந்த இரண்டு இலங்கைப் பிரஜைகளும் இன்னும் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் பதுங்கியிருக்கக்கூடும் என சந்தேகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும் இந்த கொலைச் சம்பவத்திற்கும் இலங்கையில் நிகழ்ந்த இனப்பிரச்சனைக்கும் தொடர்புள்ள சாத்தியத்தையும் டத்தோ அலாவுடின் நிராகரித்தார்.








