Jun 30, 2026
Thisaigal NewsYouTube
1.3 பில்லியன் டாலர் இழப்பீடு: நஜிப்பின் மேல்முறையீட்டு மனு மே 7-ல் விசாரணை
தற்போதைய செய்திகள்

1.3 பில்லியன் டாலர் இழப்பீடு: நஜிப்பின் மேல்முறையீட்டு மனு மே 7-ல் விசாரணை

Share:

எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரி, முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தாக்கல் செய்த மனுவை மே மாதம் 7-ஆம் தேதி விசாரிக்க கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

முன்னதாக, நஜிப் ரசாக் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி நிறுவனத்தின் நிதியைத் தன்னிச்சையாகக் கையாண்டதாகக் கூறி, அவருக்கு இந்த அபராதத்தை விதித்து நீதிபதி அகமது ஃபைரூஸ் ஜைனுல் ஆபிதின் தீர்ப்பளித்திருந்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நஜிப்பிற்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது இந்த இடைக்காலத் தடை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வரும் மே 7-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த விசாரணை இணையம் வாயிலாக நடைபெறும் என்றும், அன்றைய தினமே வழக்குச் செலவுகள் குறித்தும் நீதிமன்றம் முடிவெடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News