Nov 16, 2025
Thisaigal NewsYouTube
சட்டத்திற்குப் புறம்பான கோழிப் பண்ணையால் 4 மாதங்கள் ஈக்கள் தொல்லை! கோல லங்காட் கிராம மக்கள் விழி பிதுங்கினர்!
தற்போதைய செய்திகள்

சட்டத்திற்குப் புறம்பான கோழிப் பண்ணையால் 4 மாதங்கள் ஈக்கள் தொல்லை! கோல லங்காட் கிராம மக்கள் விழி பிதுங்கினர்!

Share:

கோல லங்காட், நவம்பர்.16-

சிலாங்கூர், கோல லங்காட், கம்போங் தும்புக் டாராட் கிராமவாசிகள் கடந்த நான்கு மாதங்களாக விவரிக்க முடியாத ஈக்கள் தொல்லையால் அவதிப்பட்டு வந்தனர். இது சட்டத்திற்குப் புறம்பாக இயங்கி வந்த ஒரு கோழிப் பண்ணையின் சுகாதாரமற்ற சூழலால் ஏற்பட்டதாகக் கிராம மக்கள் குற்றம் சாட்டினர். உணவுகளிலும் வீட்டிற்குள்ளும் ஈக்கள் மொய்த்ததால், சுமார் 160 வீடுகளின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு, கிராமத்தில் சுகாதார அபாயமும் எழுந்தது. கிராம மக்களின் தொடர் புகார்களை அடுத்து, உரிய உரிமம் இன்றி மோசமான முறையில் இயங்கிய பண்ணையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட சிலாங்கூர் கால்நடை சேவைத் துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியதாக அதன் சிலாங்கூர் மாநில இயக்குநர் டாக்டர் ஹஸ்ஸுஸானா காலில் தெரிவித்தார்.

உடனடியாக, அந்தச் சட்டத்திற்குப் புறம்பான பண்ணையில் இருந்த சுமார் 10 ஆயிரம் கோழிகளை கால்நடை சேவைத் துறை பறிமுதல் செய்ததுடன், முன்னதாக விதிக்கப்பட்ட அபராதத்தைச் செலுத்தத் தவறிய உரிமையாளர் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்குடன், ஊராட்சி மன்றம் காவற்படையுடன் இணைந்து, அந்தச் சட்டத்திற்குப் புறம்பான கோழிக் கூண்டுகளை இடித்துத் தள்ளியதால், கிராம மக்கள் நிம்மதிப் பெருமூச்சு அடைந்துள்ளனர்.

Related News