Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பகிரங்க மன்னிப்பு கேட்டார் பாஸ் கட்சித் துணைத்தலைவர்
தற்போதைய செய்திகள்

பகிரங்க மன்னிப்பு கேட்டார் பாஸ் கட்சித் துணைத்தலைவர்

Share:

1969 ஆம் ஆண்டு மே கலவரம் வெடித்த காலகட்டத்தில் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், பல சீனக்குடும்பங்களுக்கு அடைக்கலம் தந்து உதவியதாக பாஸ் கட்சி மாநாட்டில் தாம் தவறான தகவலை வெளியிட்டதற்காக அக்கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் இன்று பகிரங்க மன்னிப்பை கேட்டுக்கொண்டார்..

உண்மையிலேயே ஒரு சீனக்குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டப்பட்டுள்ளது. அது பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அல்ல. மாறாக, அவரின் தாத்தா என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் அது 1969 ஆம் ஆண்டு மே கலவரத்தின் போது நடந்த சம்பவம் என்ற தகவலும் தவறானதாகும் என்பதையும் துவான் இப்ராஹிம் ஒப்புக்கொண்டார். அது மே கலவரத்தின் போது அல்ல. மாறாக, இரண்டாவது உலகப் போரின் போது நடந்த சம்பவம் என்பதையும் துவான் இப்ராஹிம் ஒப்புக்கொண்டார்.

தவறான தகவலை வெளியிட்டதற்காக தம்மை மன்னித்து அருளும்படி குபாங் கிரியான் நாடாளுமன்ற உறுப்பினராக துவான் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.

Related News