Jul 1, 2026
Thisaigal NewsYouTube
"துணிச்சல் இருந்தால் அம்னோவின் அனைத்து தலைவர்களையும் நீக்குங்கள்" -அக்மல் சலே சவால்
தற்போதைய செய்திகள்

"துணிச்சல் இருந்தால் அம்னோவின் அனைத்து தலைவர்களையும் நீக்குங்கள்" -அக்மல் சலே சவால்

Share:

அம்னோவின் கொள்கைகளுக்குச் சவால் விடுக்கப்பட்டால், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட எவருடைய அழுத்தத்திற்கும் கட்சி பணியாது என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மல் சலே வலியுறுத்தியுள்ளார்.

நெகிரி செம்பிலானில் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து, ரந்தாவ் சட்டமன்ற உறுப்பினராகவும் திகழும் வெளியுறவு அமைச்சர் முகமது ஹசான்-ஐ இலக்காகக் கொண்டு, ஜசெக இளைஞர் பிரிவு விடுத்த கோரிக்கைகளைச் சுட்டிக்காட்டியுள்ள அக்மல், அண்மையக் காலமாக அரசாங்கத்திலிருந்து அம்னோ தலைவர்களை நீக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், சிலாங்கூர் பிகேஆர் தேர்தல் இயக்குனர் என்.சதிய பிரகாஷ், சுங்கை ஏர் தாவார்சட்டமன்ற உறுப்பினர் ரிசாம் இஸ்மாயில்-ஐ மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளதாக அக்மல் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், அம்னோ தனது அடிப்படை நிலைப்பாடுகள் பாதிக்கப்படும் சூழலில், எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் அடிபணியாது என்றும் அக்மல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர்கள் உண்மையிலேயே துணிச்சல்மிக்கவர்களாக இருந்தால், அனைத்து அம்னோ அமைச்சர்கள், துணையமைச்சர்கள் மற்றும் ஆட்சிக் குழு உறுப்பினர்களையும் நீக்கட்டும் என்று கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்ற அம்னோவின் 80-வது ஆண்டு நிறைவு மாநாட்டில் அக்மல் தெரிவித்துள்ளார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை