Sep 26, 2026
Thisaigal NewsYouTube
கெப்போங்கில் அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்து: 53 வயது ஆடவர் மரணம்
தற்போதைய செய்திகள்

கெப்போங்கில் அதிகாலையில் ஏற்பட்ட தீவிபத்து: 53 வயது ஆடவர் மரணம்

Share:

சிலாங்கூர் மாநிலம், கெப்போங், தாமான் இஹ்சான் பகுதியில், இன்று வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 53 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.

இத்தீவிபத்து குறித்து அதிகாலை 2.31 மணியளவில் தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தீவிபத்தில் ஒரே மாடி கொண்ட ஐந்து தரை வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

பாதிக்கப்பட்ட வீடுகளில் ஒன்றின் படுக்கையறையில் தீயில் கருகிய நிலையில், ஆடவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அகமட் முக்லிஸ் குறிப்பிட்டுள்ளார்.

இத்தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News