கோலாலம்பூர், செப்டம்பர்.11-
கோலாலம்பூர் கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையின் போது டாங் வாங்கி மாவட்ட காவல் துறைத் தலைவர் சுஸில்மி அஃபெண்டி சுலைமான் தலையில் காயமடைந்தார்.
இன்று வியாழக்கிழமை அப்பகுதியில் நடைபெற்ற நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையின் போது, அதிருப்தியடைந்த பல குடியிருப்பாளர்கள் அப்பகுதிக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதால் பதற்றமான சூழல் நிலவியது.
கம்போங் சுங்கை பாரு குடியிருப்புப் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சித் திட்டத்திற்கு அங்குள்ள பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், வரும் 2026-ம் ஆண்டு, முதலாம் காலாண்டிற்குள் அங்கு மறுசீரமைப்புப் பணிகளைத் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








