ஜார்ஜ்டவுன், ஜனவரி.10-
மலாயா புலிகளின் எண்ணிக்கை பேரழிவுக்கான அளவில் வீழ்ச்சியடைந்து வருவது குறித்து பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
மலேசியக் காடுகளில் 150-க்கும் குறைவான மலாயா புலிகளே எஞ்சியுள்ளன. வேட்டையாடுதல், சாலை விபத்துகள், உணவுத் தட்டுப்பாடு மற்றும் காடழிப்பு ஆகியவை இந்தப் புலிகளின் அழிவுக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன என்று அது குறிப்பிட்டுள்ளது.
மலாயா புலிகளை அழிவிலிருந்து பாதுகாக்க, கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்று அது வலியுறுத்தியுள்ளது.
அதே வேளையில் அடர்ந்த காடுகளில் மலாயா புலிகளை பாதுகாக்க ரோந்துப் பணிகளுக்கு நிதி ஒதுக்குதல், ஊழலைத் தடுத்தல், வன வழித்தடங்களை உருவாக்குதல், பழங்குடியின மக்களைப் பாதுகாப்பில் ஈடுபடுத்துதல் மற்றும் வலுவான அரசியல் உறுதிப்பாடு போன்ற முக்கியப் பரிந்துரைகளை பினாங்கு பயனீட்டாளர் சங்கம், அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது.
அதே வேளையில் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக அடர்ந்த காடுகளை அழிப்பதைத் தவிர்ப்பது, மலாயா புலிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கையாகும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.








