Sep 29, 2026
Thisaigal NewsYouTube
காவல்துறையினரைத் தாக்கிய பெண் வணிகர் கைது
தற்போதைய செய்திகள்

காவல்துறையினரைத் தாக்கிய பெண் வணிகர் கைது

Share:

கூலிம், பிப்ரவரி.15-

கூலிம், சுங்கை கோப் காவல் நிலையத்தில் பெண் காவலரை அவதூறாகப் பேசியதுடன், தடுக்க முயன்ற ஆண் காவலரின் முகத்தில் குத்திய 34 வயது பெண் வணிகர் ஒருவரைப் காவற்படையினர் கைது செய்துள்ளனர். காவல் நிலையத்தின் புகார் பிரிவு கதவை உதைத்துச் சேதப்படுத்திய அந்தப் பெண், போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பதும் அவருக்கு முன் குற்றப் பின்னணி ஏதும் இல்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூலிம் மாவட்டக் காவற்படையின் துணைத் தலைவர் டெபுட்டி சுப்ரிண்டெண்டன் தெங்கு முஹமட் ஃபைசால் தெங்கு யெங் தெரிவித்தார். பொதுச் சேவை ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related News