Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஒன்பது பேர் ஏழு நாட்களுக்குத் தடுத்து வைப்பு
தற்போதைய செய்திகள்

ஒன்பது பேர் ஏழு நாட்களுக்குத் தடுத்து வைப்பு

Share:

ஈப்போ, செப்டம்பர்.08-

ஈப்போ சிம்பாங் பூலாயில் காருக்குள் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரை 7 நாட்கள் தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர்.

30க்கும் 70 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஒன்பது பேரும் ஈப்போ, நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் அனிஸ் ஹானினி அப்துல்லா முன்னிலையில் நிறுத்தப்பட்டு தடுப்புக் காவலுக்கான அனுமதி பெறப்பட்டது.

கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில், ஒரு பெண், குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வேளையில் எஞ்சிய எட்டு பேர் குற்றவியல் சட்டம் 307 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று அதிகாலை சிம்பாங் பூலாயில் ஒரு போலீஸ்காரரைக் கத்தியால் குத்திச் சுட்டுக் கொன்ற நபரின் வாகனத்தில் ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Related News