Feb 12, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய மக்கள் தொகை 34.3 மில்லியனாக உயர்வு: இந்தியர்களின் விகிதம் 6.5 விழுக்காடாக நீடிப்பு
தற்போதைய செய்திகள்

மலேசிய மக்கள் தொகை 34.3 மில்லியனாக உயர்வு: இந்தியர்களின் விகிதம் 6.5 விழுக்காடாக நீடிப்பு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.12-

மலேசியாவின் மொத்த மக்கள் தொகை 2025-ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் 34.3 மில்லியனாக அதிகரித்துள்ள வேளையில், நாட்டின் மூன்றாவது பெரிய இனமான இந்தியர்களின் மக்கள் தொகை விகிதத்தில் எவ்வித மாற்றமும் இன்றி நிலைத்தன்மை நீடிப்பதாக மலேசியப் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

தலைமைப் புள்ளியியல் அதிகாரி டத்தோ ஶ்ரீ டாக்டர் உஸிர் மஹிடின் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் இனவாரியான மக்கள் தொகை கட்டமைப்பில் இந்தியர்கள் தொடர்ந்து 6.5 விழுக்காடு என்ற அளவில் நீடிக்கின்றனர்.

கடந்த 2024-ஆம் ஆண்டின் இதே காலக் கட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த விகிதத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் நிலவும் பிறப்பு விகிதச் சரிவு மற்றும் மக்கள் தொகை வளர்ச்சி மந்தநிலை ஆகியவற்றுக்கு மத்தியிலும், இந்திய சமூகத்தின் இந்த விகிதாச்சாரம் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

அதே வேளையில், நாட்டின் பிற இனங்களான மலாய்க்காரர்கள் 58.2 விழுக்காடு, சீனர்கள் 22.2 விழுக்காடு மற்றும் இதர பூமிபுத்ராக்கள் 12.3 விழுக்காடு என்ற விகிதத்தில் உள்ளனர். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் குடிமக்களின் பங்கு 90.1 சதவீதமாகவும், வெளிநாட்டவர்களின் பங்கு 9.9 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது என்று உஸிர் மஹிடின் தெரிவித்தார்.

Related News

‘வழிபாட்டுத் தல விவகாரங்கள்: சட்ட ரீதியாகவும் பேச்சுவார்த்தை மூலமும் தீர்வு காண வேண்டும் - ராயர், சானி ஹம்ஸான் வலியுறுத்தல்

‘வழிபாட்டுத் தல விவகாரங்கள்: சட்ட ரீதியாகவும் பேச்சுவார்த்தை மூலமும் தீர்வு காண வேண்டும் - ராயர், சானி ஹம்ஸான் வலியுறுத்தல்

வழிபாட்டுத் தல விவகாரங்களைப் பெரிதுபடுத்த வேண்டாம்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் அறிவுறுத்தல்

வழிபாட்டுத் தல விவகாரங்களைப் பெரிதுபடுத்த வேண்டாம்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் அறிவுறுத்தல்

ஜோகூர் குடிநுழைவுத் துறை மற்றும் போலீஸ் துறை அதிரடிச் சோதனை: 26 வெளிநாட்டினர் கைது

ஜோகூர் குடிநுழைவுத் துறை மற்றும் போலீஸ் துறை அதிரடிச் சோதனை: 26 வெளிநாட்டினர் கைது

சாரா (SARA) நிதியுதவி: ஒரே நாளில் 20 லட்சம் மலேசியர்கள் பயன் பெற்றுள்ளனர்

சாரா (SARA) நிதியுதவி: ஒரே நாளில் 20 லட்சம் மலேசியர்கள் பயன் பெற்றுள்ளனர்

முன்னாள் அமைச்சர் மீதான 1.11 பில்லியன் ரிங்கிட் முதலீடு முறைகேடு புகார்: எஸ்பிஆர்எம் தீவிர ஆய்வு

முன்னாள் அமைச்சர் மீதான 1.11 பில்லியன் ரிங்கிட் முதலீடு முறைகேடு புகார்: எஸ்பிஆர்எம் தீவிர ஆய்வு

‘கோயில் இடிப்பு' விவகாரம்: தமீம் தஹ்ரி உள்ளிட்ட 4 பேரின் தடுப்புக் காவல் ரத்து - நீதிமன்றம் உத்தரவு

‘கோயில் இடிப்பு' விவகாரம்: தமீம் தஹ்ரி உள்ளிட்ட 4 பேரின் தடுப்புக் காவல் ரத்து - நீதிமன்றம் உத்தரவு