Jul 2, 2026
Thisaigal NewsYouTube
பள்ளிப் பேருந்தை இறுதி ஊர்வலக் குழுவினரை ஏற்றிச் செல்லப் பயன்படுத்திய ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

பள்ளிப் பேருந்தை இறுதி ஊர்வலக் குழுவினரை ஏற்றிச் செல்லப் பயன்படுத்திய ஓட்டுநர் தடுத்து வைக்கப்பட்டார்

Share:

பாலிங், மே.17-

கெடா மாநிலத்தில் 73 வயது பள்ளிப் பேருந்து ஓட்டுநர் ஒருவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் இல்லாததால், தனது பேருந்தைக் கட்டணப் பயணிகள் சேவையாகப் பயன்படுத்தி வந்துள்ளார்.

இறுதிச் சடங்கு ஒன்றில் கலந்து கொள்ள 26 பயணிகளை ஏற்றிச் சென்ற போது, சாலைப் போக்குவரத்து இலாகாவைச் சேர்ந்த அதிகாரிகள் அப்பேருந்தை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

அப்போது, அனுமதி விதிமுறைகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் அப்பேருந்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய கெடா ஜேபிஜே இயக்குநர் Stien Van Lutam, கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் இல்லாத காரணத்தால் அப்பேருந்து பள்ளிச் சேவைக்குப் பயன்படுத்தப்படவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நிலப் பொது போக்குவரத்து சட்டம் 2010 இன் பிரிவு 22(3), பிரிவு 80(1) ஆகியவற்றின் கீழ் பேருந்தைப் பறிமுதல் செய்ததாகவும் Stien Van Lutam தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த ஓட்டுநர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

375,000 ரிங்கிட் போலி ஜெர்சிகள் பறிமுதல்!

375,000 ரிங்கிட் போலி ஜெர்சிகள் பறிமுதல்!