பட்டானி,செப்டம்பர் 02-
நாட்டின் 67 ஆவது தேசியத் தினத்தை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை கிட்டத்தட்ட 20 ஆயிரம் மலேசியர்கள் தங்கள் விடுமுறையை தென் தாய்லாந்தில் உல்லாசமாக கழித்துள்ளனர்.
இதன் மூலம் தாய்லாந்து பணத்தில் 10 மில்லியன் Baht வர்ததகம் நடைபெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான மலேசியர்கள், நாட்டின் பிரதான எல்லையான புக்கிட் காயு ஹிதம் மற்றும் பெங்கலன் ஹுலு வாயிலாக தென் தாய்லாந்தின் முக்கிய நகரமான சதாவோ மற்றும் பெட்டாங் ஆகியவற்றில் நுழைந்திருக்கின்றர் என்று தாய்லாந்து சுற்றுலா அலுவலகம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.








