மலேசியாவில் கர்ப்பிணிப் பெண்களுக்கு தெதானுஸ் - டிவ்தெரியா - பெர்துஸ்ஸிஸ் நோய் தடுப்பிற்குரிய தடுப்பு ஊசி முறையை சுகாதார அமைச்சு அடுத்த ஆண்டில் அறிமகப்படுத்தவிருப்பதாக அதன் அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்துள்ளார்.
கர்ப்பிணிப் பெண்களின் சுகாதார நலன் பேணும் இந்த திட்டமானது, 5 மாதத்திற்கும் குறைவான குழந்தைகள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்ய வல்லதாகும் என்று அமைச்ச்ர விளக்கினார். 5 மாதத்திற்கும் குறைவான குழந்தைகள் மத்தியில் நோய்கள் தாக்கும் அபாயம் இருப்பதால் குழந்தை பிரசவத்திற்கு முன்னதாகவே இந்த தடுப்பூசி கர்ப்பிணிப் பெண்களுக்கு செலுத்தப்படும் என்று டாக்டர் ஜாலிஹா குறிப்பிட்டார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


