Jul 30, 2026
Thisaigal NewsYouTube
அந்த சிறார்களின் தந்தை குற்றஞ்சாட்டப்படுவார்
தற்போதைய செய்திகள்

அந்த சிறார்களின் தந்தை குற்றஞ்சாட்டப்படுவார்

Share:

செபாங் , ஆகஸ்ட் 06-

தனது 4 வயது மற்றும் 6 வயது தம்பிகளை காரில் ஏற்றிக்கொண்டு, ஒரு வீடமைப்புப்பகுதியில் வலம் வந்த 12 வயது சிறுவன் சம்பந்தப்பட்ட காணொளி அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அந்த 12 வயது சிறுவனும், அவனது தந்தையும் சிப்பாங் நீதிமன்றத்தில் நாளை புதன்கிழமை குற்றஞ்சாட்டப்படவிருக்கின்றனர். .
12 வயது சிறுவன் காரை செலுத்தியது, அவனது செயலில் 53 வயது தந்தை அலட்சிம் காட்டியது ஆகிய குற்றப்பதிவுகள், மகனுக்கும், தந்தைக்கும் எதிராக கொண்டு வரப்படும் என்று சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் கமருல் அஸ்ரான் வான் யூசோப் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக நடைபெற்ற விசாரணை முடிவடைந்த நிலையில் அவர்களை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டுவதற்கு துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அலுவலகம் அனுமதி வழங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

அவ்விருவரும் 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்படவிருக்கின்றனர். கடந்த ஜுலை 28 ஆம் தேதி இரவு 8 மணியளவில் அந்த 12 வயது சிறுவன் தனது இரண்டு தம்பிகளை அழைத்துக்கொண்டு, Perodua Viva காரை செலுத்திய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டதுடன் அந்த சிறாரின் பெற்றோரை கண்டித்தனர்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை